Header Ads

test

எண் சோதிடப்படி விவாகப்பொருத்தம்


ஜாதகம் இல்லாதவர்கள் தங்களுடைய பிறந்த திகதியின் உதவியுடன் தங்களுக்கு ஏற்ற கணவன் மனைவியைத் தெரிவு செய்யலாம் .


௦1.முதலாம் எண் காரருக்கு நாலாம் எண் காரர் காந்தம் இரும்பு போன்ற வசியம்.மற்றும் 3,5,7,9 இவைகளில் பிறந்தோர் இரண்டாம் படியான வசியம்.6 ல் பிறந்தோரை மணம் செய்தால் குடும்பம் பிடியாது.ஆனால்ஒரு காலமும் மனமொத்த காதலர்கள் ஆக மாட்டர்கள் .


02.இரண்டாம் எண் காரருக்கு ஏழாம் எண் காரர் சிறந்த வசியம் .மற்றும் எண் 5,6 ல் பிறந்தவர்களையும் மணக்கலாம் .எண் காரர் ஆண் களாயின் முதலாம் எண் காரப் பெண்ணை மணக்கக் கூடாது.காரணம் கணவனை அதிகாரம் செய்ய முயலுவார் .எண் 9 தவிர்க்கவும் .

03.மூன்றாம் எண் காரருக்கு 5,9 ம் எண் காரர் சிறந்த வசியம்.தன்னோடு ஒத்த 3ம் எண் காரரையும் மணக்கலாம். 1ம் எண் 2ம் படியான வசியம்.3ம் எண் காரர் பிரபுத்தன்மை உடையவர்கள்.

04.நாலாம் எண் காரருக்கு முதலாம் எண் காரர் சிறந்த வசியம்.மற்றும் 5,6,7ம் எண் காரரையும் மணக்கலாம் . 4 ம் எண் காரர் ஆண்களாயின் முதலாம் எண் காரப் பெண்ணை மணந்தால் நல்ல ஒற்றுமை மனைவியின் சொற்படி நடப்பார்.

05.ஐந்தாம் எண் காரருக்கு சகலரும் வசியம்.இவைகளுள் எண் 5,9ல் பிறந்தவர்கள் சிறந்த வசியம்.மற்றும் 1,3,7,8 இவைகளில் பிறந்தவர்களையும் மணக்கலாம்.

06.ஆறாம் எண் காரர் சகலரையும் வசியப்படுதுவர்கள்.தன்னோடு ஒத்த 6ம் எண் காரரையும் மனமார நேசிப்பார்.மற்றும் எண் 4,5,7,9 எண் காரர் சாதாரண வசியம்.6ம் எண் காரர் பெண்களாயின் 2ம் எண் கார ஆண்களை மணம் செய்ய வேண்டாம்.

07.ஏழாம் எண் காரருக்கு இரண்டாம் எண் காரர் சிறந்த வசியம்.மற்றும் 1,5,6,8ம் எண் காரரும் சாதாரண வசியம்.தன்னோடு ஒத்த ஏழாம் எண் சகலத்திலும் ஒத்து போவார்.9 ம் எண் காரர் பொருந்தாது.

08.எட்டாம் எண் காரர் (CHILD OF FATE) அதாவது விதியின் கைப்பிள்ளைகள்.இவர்களுக்கு எவரும் உறவேன்றில்லை.பகைஎன்றும் இல்லை.எவரோடும் பழகுவார்கள்.இவர்களுக்கு 4ம் ,5ம் எண் காரர்கள் சிறந்த வசியம்.

09.ஒன்பதாம் எண் காரருக்கு 5ம் 6ம் எண் காரர்கள் சிறந்த வசியம்.மற்றும் தன்னோடு ஒத்த 9ம் எண் காரரையும் 3ம் எண் காரரையும் மணக்கலாம்.எண் 1,4 சாதாரணம் 2,7 தவிர்க்கவும்.

NOTE:-பிறந்த கூட்டு எண்ணையும்அனுசரித்து அவசியம் பார்க்கவும்.

No comments